சுவிட்சர்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப்பெண்; அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்

srilanka police prison death women
By Sulokshi Aug 26, 2021 04:27 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 சுவிட்சர்லாந்து சிறையில் இலங்கை பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் , பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை பெண் உயிரிழந்தமை தொடர்பில் நான்கு சிறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பேசல் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 2018 ஜூன் மாதம் 29 வயதான இலங்கை பெண் ஒருவர் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்தார்.

இது தொடர்பான சம்பவம் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி,

வாகோஃப் ரிமாண்ட் சிறையில் உள்ள ஒரு அறையில் நடந்துள்ளது. டப்ளின் நடைமுறையின்படி குறித்த இலங்கையர் மால்டாவுக்கு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவரது புகலிட நடைமுறைக்கு மால்டா தீவு நாடுதான் பொறுப்பு என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 12ம் திகதி கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்ட அறை ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரது பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கவே இந்த ஏற்பாடு எனவும் கூறப்பட்டது. எனினும் குறித்த இலங்கையர் அன்று இரவு தமது மேல்சட்டையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சுமார் 4 நிமிடங்களுக்கு பின்னரே, இச்சம்பவம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்ததுடன், அவர்கள் மேற்பார்வை ஊழியர்களை சிறையின் குறிப்பிட்ட அறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் இரு சிறை காவலர்கள்  அவரை  மீட்டு  மருத்துவ உதவிகளை செய்ய தவறியதாகவே கூறப்படுகிறது. மேலும், அந்த மூவரும் நான்காவது ஒரு பெண் காவலரை உதவிக்கு அழைத்துள்ளனர். இவர்கள் நால்வரும் குறித்த இலங்கையரை நிர்வாண கோலத்தில் விட்டுச் சென்றதாகவே கூறப்படுகிறது.

இதன் பின்னர் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகே கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் சென்றுள்ளது. இதனையடுத்து சுமார் 18 நிமிடங்களுக்கு பிறகு அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்த 2 நாட்களுக்கு பிறகு அந்த இலங்கையர் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

தற்போது குறித்த இலங்கையரை மீட்கத்தவறிய அந்த நான்கு மேற்பார்வையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அதிகாரிகள்  இலங்கையரின் மரணத்தை தடுத்திருக்கலாம் எனவும், அந்த நால்வரும் தங்கள் கடமையை செய்யத் தவறியதால் ஒரு உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளதாக அரசு தரப்பு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US