இங்கிலாந்து ரயிலில் கொடூர கத்தி குத்து தாக்குதல் : 9 பேர் படுகாயம்
இங்கிலாந்தில் தொடருந்தில் சிலர் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் பத்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மொத்தமாக பத்து பேர் காயமடைந்தனர் எனவும் இதில் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் கேம்பிரிட்செயர் என்னும் இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டிகள் ஊடாக வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாக தீவிரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் அந்த அறிவிப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணகைளின் பின்னர் எவ்வாறான தாக்குதல் என்பது குறித்து அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் இருப்பவர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தல்ளை பின்பற்ற வேண்டுமென பிரதமர் கியர் ஸ்ட்ராமர் தெரிவித்துள்ளார்.