லண்டனில் பிறருக்காக வரிசையில் நின்று தினமும் 160 பவுண்ட் சம்பாதிக்கும் நபர்! ஆச்சரியத்தை ஏற்படுத்திய தகவல்

London Person Mr. Beckitt Stands 160 Pounds
By Sulokshi Jan 18, 2022 04:28 PM GMT
Report

லண்டனில் அடுத்தவர்களுக்காக வரிசையில் நின்று, ஒருவர் அன்றாடம் 160 பவுண்ட் சம்பாதிக்கின்றமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஃப்ரெட்டி பெக்கிட் என்பவர், இந்த தொழிலை கடந்த மூன்றாண்டுகளாக கூடுதல் தொழிலாகவே செய்து வருகிறாராம்.

பிரிட்டனில் அவர் அன்றாடம் சர்வ சாதாரணமாக 160 பவுண்ட் சம்பாதிக்கிறார். ஃப்ரெட்டி அடிப்படையில் வரலாற்றுக் கதை எழுதுபவர்.

ஆனால், சரித்தரம் அவரைப் பற்றி ப்ரொஃபஷனல் க்யூயர் என அடையாளப்படுத்தியுள்ளது. லண்டன் நகரில் ஃபுல்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் ஃப்ரெட்டி. அவருடைய க்ளையன்டுகளில் பலர் கைக்குழந்தைகளையும், வயதானவர்களையும் வீட்டில் பராமரிக்க வேண்டியவர்கள் என கூறுகிறார்.

லண்டனில் பிறருக்காக  வரிசையில் நின்று தினமும்  160 பவுண்ட்  சம்பாதிக்கும் நபர்! ஆச்சரியத்தை ஏற்படுத்திய தகவல் | Stands For Others In London And Earns 160 A Day

அவர்களில் இன்னும் சிலர் வரிசையில் நிற்க முடியாத செல்வந்தர்களாம். தி சன் பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டியிலிருந்து,

எனது 60 வயது க்ளையன்ட்டுகள் சிலருக்காக நான் சுமார் 8 மணி நேரம் வரை வரிசையில் நின்றுள்ளேன். டிக்கெட் வாங்க அதிகபட்சமாக 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் சிலர் டிக்கெட் வாங்கிவிட்டு தாங்கள் வரும் வரை உள்ளே செல்வதற்கான வரிசையில் நிற்குமாறு கூறுவார்கள்.

அதற்காக மணிக்கு 20 பவுண்ட் தருவார்கள் என அவர் கூறுகின்றார். கிறிஸ்துமஸ் ஷாப்பிங் வரிசையில் நின்றிருக்கிறேன், அப்பல்லோ தியேட்டர்ஸில் நடைபெறும் மிகப் பெரிய இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் பெறு வரிசையில் நின்றிருக்கிறேன்.

இதுபோன்ற மிகப் பெரிய நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வரிசையில் நின்று பெற வேண்டிய சூழல் வரும்போது என்னைப் பற்றி அறிந்தவர்கள் என்னை முன்கூட்டியே புக் செய்து கொள்வார்கள் எனக் கூறினார்.

லண்டனில் பிறருக்காக  வரிசையில் நின்று தினமும்  160 பவுண்ட்  சம்பாதிக்கும் நபர்! ஆச்சரியத்தை ஏற்படுத்திய தகவல் | Stands For Others In London And Earns 160 A Day

அதோடு ஃப்ரெட்டி தனது வேலை பற்றி https://www.taskrabbit.co.uk/ டாஸ்க் ரேபிட் என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். வரிசையில் நிற்பதையும் தாண்டி செல்லப்பிராணிகளைப் பார்த்துக் கொள்ளுதல், வீட்டை மாற்றுவோருக்கு உதவுவது, சிறுசிறு வேலைகளை செய்து கொடுப்பது, தோட்டவேலை செய்வது எனப் பல வேலைகளையும் செய்து கொடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.

நான் வேலை தேடினேன். அப்போதுதான் இப்படியான சிறு வேலைகளைப் பற்றி, எந்தத் திறமையுமே தேவைப்படாத வேலையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். டாஸ்க்ரேபிட்டில் என்னால் என்ன செய்ய முடியுமென்பதைப் பட்டியலிட்டேன்.

இன்று அன்றாடம் ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் சம்பாதிக்கிறேன். இனிமேல் இதில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. குறிப்பாக நான் நினைக்கும் நேரத்தில் வேலை செய்கிறேன். நினைக்கும் நாளில் செய்கிறேன்.

எழுதுவதற்கான நேரத்தை என்னால் நிர்ணயிக்க முடிகிறது. எனது நண்பர்களும், உறவினர்களும் எனது வேலை நகைப்பூட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால் யாரும் எனது சம்பாதியத்தைக் கேட்டு ஆச்சர்யப்படாமல் இல்லை என ஃப்ரெட்டிகூறியுள்ளார் .

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US