ஐரோப்பாவில் 5 நாட்கள் பட்டினி கிடந்தேன்... பிரபல தொழிலதிபர்!
ஐரோப்பாவில் ஐந்து நாட்கள் பட்டினி கிடந்ததாக பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி நிகிழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
'உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள். ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் 'லிப்ட்' கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்.
அப்போது பல்கேரியாவுக்கும் இன்றைய செர்பியாவுக்கும் இடையே உள்ள நிஷ் என்ற பகுதியில் 120 மணித்தியாலங்கள் (5 நாட்கள்) பட்டினி கிடந்தேன்' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நிபுணர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.