சிலி நாட்டில் பெரும் காட்டுத்தீயால் அவசர நிலை அறிவிப்பு; வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்
சிலி நாட்டில் பெரும் காட்டுத்தீ பரவி வருவதனால் அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்து உள்ளார். காட்டுத்தீயால் , மக்களுடன் காடுகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். சிலியின் மத்திய பையோபையோ பகுதி, பக்கத்தில் உள்ள நூபிள் பகுதி என பல இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளன.

50 ஆயிரம் பேர் வெளியேற்றம்
. நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்துள்ளன. இதனையடுத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்திருக்க கூடும் என போரிக் அச்சம் தெரிவித்து உள்ளார். மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதேசமயம் சிலி அருகே உள்ள அர்ஜென்டினா நாடும் காட்டுத்தீயில் சிக்கி போராடி வருகிறது.
சமீப வாரங்களில் தெற்கு படகோனியா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் தீயில் எரிந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.