கனடாவில் வேலைவாய்ப்பு நிலை குறித்து வெளியான தகவல்
கனடாவில் வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன் விளைவாக வேலை இழப்பு விகிதம் 2016 மே மாதத்திற்குப் பிந்தைய மிக உயர்ந்த நிலைக்கு (கொரோனா காலத்தைத் தவிர்த்து) உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளுது. ஆகஸ்ட் மாதத்தில் 66,000 வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டதனால், வேலை இழப்பு விகிதம் 7.1% ஆக உயர்ந்துள்ளது.
மிக மோசமான பதிவு
இது கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் பதிவான மிக மோசமான பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜூலை மாதத்திலும் 41,000 வேலைகள் இழக்கப்பட்டிருந்ததுடன், அப்போது வேலை இழப்பு விகிதம் 6.9% ஆக பதிவாகியிருந்தது.
ஆகஸ்ட் மாதத்திற்கான முன்னறிவிப்பில், பொருளாதார நிபுணர்கள் 10,000 வேலைகள் அதிகரிக்கும் என்றும், வேலை இழப்பு விகிதம் 7% ஆக இருக்கும் என்றும் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும் வேலை இழப்பு எண்ணிக்கை அதிகரித்திருந்தது.