கனடாவின் பணவீக்கம் குறித்து இன்று அறிக்கை வெளியீடு
ஒட்டுமொத்த சந்தை கணிப்புகளின் அடிப்படையில், கனடாவின் ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் 1.6% ஆகக் குறைந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில் இது 2.3% ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், கனடாவின் லிபரல் அரசு நுகர்வோர் கார்பன் வரியை நீக்கியது.
இதனால் எரிபொருள் விலையிலிருந்து ஓர் அளவு நிவாரணம் கிடைத்துள்ளது. இது பணவீக்கத்தை குறைக்கும் ஒரு காரணியாகும்.
அதே நேரத்தில், ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வரி மோதல் நடைமுறையான, முழு முதல் மாதமாகவும் இருந்தது.
வாடிக்கையாளர்கள் சில பொருட்களுக்கு அதிகம் செலுத்தியிருந்தாலும், இதனால் பணவீக்கத்தில் உடனடி உயர்வு ஏற்பட வாய்ப்பில்லை என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.