அழகானவர்களிடம் விலகி இருங்கள் ; மாணவர்களுக்கு சீனா எச்சரிக்கை
அழகான ஆண்களையோ, பெண்களையோ சந்திக்கும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு சீனா அரசாங்கம் எச்சரித்துள்ளது.
ஏனென்றால் அவர்கள் வெளிநாட்டு உளவாளிகளாக இருக்கலாம் என சீனா அரசு தெரிவித்துள்ளது.
ரகசியத் தகவலைப் பெறக்கூடிய மாணவர்களை நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கு அவர்கள் வசீகரமாக நடந்துகொள்ளலாம் என்று தேசியப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வேலை விளம்பரங்கள், இணை தேடும் இணையத்தளங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு உளவாளிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. எந்த நாட்டின் உளவாளிகள் அத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர் என்பதை குறிப்பிடவில்லை.
அதேவேளை ஒருவரை ஒருவர் வேவு பார்க்க ஆள் அனுப்புவதாக மேற்கத்திய நாடுகளும் சீனாவும் அடிக்கடி ஒன்றை மற்றொன்று குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        