உருமாறிய கொரோனாவால் திணறும் பிரேசில்
பிரேசில் நாட்டில் அமேசன் மாநிலம் தொடக்கம், பல நகரங்களில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தாக்கினால் நேரடியாக நுரையீரை தாக்கி வருவதாக கூறப்படுகின்றது. இது முதல் வந்த மற்றும் தென்னாபிரிக்க கொரோனா போல மென்மையானது இல்லை.
என்றும் மிக மிக கடுமையாக கொரோனா வைரஸ் எனவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக பல நகரங்களில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகிறார்கள். இதேவேளை லண்டனில் 11 பேருக்கு இதன் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கொரோனா வந்து மாறிய நபர்களை இந்த வைரஸ் அதிவேகமாக தாக்குவதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா வந்து மாறி. ஏற்கனவே நலிவடைந்துள்ள மனிதர்களுக்கு இது தொற்றினால் மரணம் நிகழும் வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும் கூறப்படுகின்றது.