ஸ்பெய்னில் காணாமல் போன கனடியர் ; தூதரகம் மீது குற்றம் சுமத்தும் உறவினர்கள்
ஸ்பெய்னில் கனடாவின் விக்டோரியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரை தேடி கண்டுபிடிப்பதற்கு ஸ்பெயினிற்கான கனேடிய தூதரகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஸ்காட் கிரஹம் என்ற நபரே இவ்வாறு காணாமல் போய் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி இந்த நபர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்பெய்னில் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தபோது தனது அலைபேசி கடவுச்சீட்டு மற்றும் அத்தியாவசிய மருந்து என்பனவற்றை தொலைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக தமது தந்தை ஸ்பெயினிக்கான கனடிய தூதரகத்திற்கு ஜூலை மாதம் 15 ஆம் தேதி சென்றிருந்தார் எனவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் அவரது இரண்டு மகள்களும் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏழு வார காலமாக தானும் தனது சகோதரி தந்தையை ஸ்பெயினில் தேடி வருவதாக மகள் காய்சா தெரிவிக்கின்றார்.
தனது முக்கிய ஆவணங்கள் தொலைந்து விட்டதாக தெரிவிப்பதற்காகவே தமது தந்தை கனடிய தூதரத்துக்கு சென்றார் எனவும் அங்கு உரிய உதவிகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.