சூயஸ் கால்வாயில் மீண்டும் பரபரப்பு.. மீட்கும் பணி தீவிரம்

Egypt Ship Travel ban SuezCanal
By Shankar Sep 09, 2021 08:59 PM GMT
Shankar

Shankar

Report

சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. அந்த கால்வாய்தான் உலகிலேயே மிக பெரிய கால்வாய் ஆகும். அந்த கால்வாயில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அதிகாரிகள் கூறியதாவது

"எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளது. மேலும் அந்த கப்பல் கால்வாயில் 54 கி.மீ தூரத்தில் மாட்டியுள்ளது. இதனால் துறைமுகத்தில் இருந்து வெளியேற வேண்டிய நான்கு கப்பல்களும் வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளது.

இதன் காரணமாக சூயஸ் கால்வாயில் போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள சரக்கு கப்பலை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளனர்.

அதாவது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள சரக்கு கப்பல் தென் அமெரிக்க நாடான பனாமாவை சேர்ந்தது என கூறப்படுகிறது. மேலும் அந்த சரக்கு கப்பல் 32 மீட்டர் அகலமும் 225 மீட்டர் நீளமும் கொண்டதாகவும் சூடான் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இந்த ஆண்டில் சூயஸ் கால்வாயில் இந்த மாதிரி நடப்பது இரண்டாவது முறையாகும்.இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் எவர்க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த 'எவர்கிவன்' என்னும் 400 மீட்டர் நீளமுள்ள கண்டைனர் கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயில் தரைதட்டி குறுக்கே சிக்கியுள்ளது.

இதனையடுத்து கால்வாயில் சிக்கிய அந்த கப்பல் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. அதன்பின் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இதன் காரணமாக எகிப்து நாட்டுக்கு மில்லியன் அளவிலான வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் 6.5 பில்லியன் பவுண்டுகள் கணக்கில் வர்த்தகம் தாமதமாகியுள்ளது.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US