சுழன்றடித்த புயல்... விளை நிலங்கள் உட்பட நாடு முழுவதும் பலத்த சேதம்
சீனாவில் சுழன்றடித்த புயல் காரணமாக மூவர் மரணமடைந்ததுடன், நாடு முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு சீனாவில் பலத்த காற்றினால் கப்பல் கட்டுமான தளத்தில் அமைந்துள்ள கிரேன் ஒன்று கவிழ்ந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மேலும், பெரிய அளவிலான விவசாய நிலங்கள் உட்பட நாடு முழுவதும் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது என கூறப்படுகிறது.
புயலின் போது 450 டன் எடையுள்ள கிரேன் பாதுகாப்புச் சாவடியின் மீது சனிக்கிழமை கவிழ்ந்தது. இதில் அந்த பாதுகாப்புச் சாவடியில் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கில், சனிக்கிழமையன்று பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்துள்லன, வாகனங்கள் நசுக்கப்பட்டன மற்றும் சாலைகள் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் உள்ள வஃபாங்டியனில் ஆலங்கட்டி மழை பெய்தது, இதனால் 200 மில்லியன் யுவான்(28 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7,000 ஹெக்டேர் அளவுக்கு விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன. வஃபாங்டியனின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமை ஒரு மணி நேரத்தில் 48.1 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது.
மத்திய மாகாணமான ஹெனானில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்கள் நாசமடைந்துள்ளதகவும்,
வெள்ளியன்று, குவாங்சி உட்பட தென்மேற்கு சீனாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ததில், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.