முழுமையாக திறக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
லெபனானில் அமுல்படுத்தப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி இன்று அறிவித்துள்ளார்.
இந்த 10 நாள் போர்நிறுத்தக் காலம் முழுவதும் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதை "முழுமையாகத் திறந்துவிடப்படும்" என அவர் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், "ஈரான் கடற்பாதை (Strait of Iran) முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மிக்க நன்றி!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்குப் பிறகு, முதன்முறையாக ஈரானிய எண்ணெய் ஏற்றிய மூன்று பெரிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச சந்தையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.