லண்டன் வீதியில் பலரையும் திரும்பவைத்த இளைஞனின் போஸ்டர்!
பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணத்தில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு, இளைஞர் ஒருவர் நூதன விளம்பரம் செய்துள்ள சம்பவம் இளையதளங்களில் வைரலாகியுள்ளது.
பொதுவாக திருமணத்திற்கு துணை தேடும் விளம்பரங்கள் பத்திரிகைகளிலும், மெட்ரிமோனியல் தளங்களிலும் இடம்பெறுவது வழக்கம்தான். இந்நிலையில் பிரிட்டன் வாசியொருவர், தமக்கென்று ஓர் இணையத்தளத்தை அமைத்துச் வீதியில் விளம்பரப் பலகையை நிறுவி, பரபரப்பூட்டியுள்ளார்.
லண்டனில் வசிக்கும் முகமது மாலிக் என்ற 29 வயது இளைஞன், பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் சொந்தமாகத் துணை தேடுவதற்கு முற்பட்டார். அதற்கான செயலிகளின் வழிகளை அவர் முயன்று பார்த்தார்.
எனினும் , யாரையும் சந்திக்க முடியவில்லை. இதனையடுத்து , நண்பர் ஒருவர் கொடுத்த யோசனைப்படி, சொந்தமாக இணையத்தளம் ஆரம்பித்து, காதலி தேடினார். இதற்காக ‘findmalikawife.com’ என்ற இணையத்தளத்தை அமைத்து, லண்டன், பர்மிங்ஹாம் பகுதிகளில் விளம்பரப் பலகைகளையும் பொருத்தினார்.
இதனையடுத்து சில நாள்களிலேயே நூற்றுக்கணக்கானோர் தம்மைத் தொடர்புகொண்டதாகத் மாலிக் கூறியதுடன், தற்போது அனைவரையும் தொடர்புகொண்டு, பொருத்தத்தைத் தீர்மானிப்பதற்கு நேரமில்லை என அவர் கூறுகின்றாராம்.
