ஜனாதிபதியை அவமரியாதை செய்தால் கடும் நடவடிக்கை! வெளியானது அதிரடி உத்தரவு
ஜனாதிபதியை அவமரியாதை செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடவோ, அல்லது பகிரவோ முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் குழுவொன்று வழங்கிய கருத்துப் பரிமாற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் விசாரணை நடத்தியதாக ஊடகவியலாளர் மாநாட்டில் பெண் ஒருவர் தெரிவித்த கருத்து தொடர்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது.
தொடர்பாக தன்னிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.