டொரன்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டொரன்டோவில் இன்றைய தினம் கடுமையான காற்று வீசும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டொரன்டோ பகுதி தொடர்பில் விசேட வானிலை எதிர்வு கூறல் ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வரையில் வேகமாக காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் இதனை விட வேகமாக பலத்த காற்று வீசும் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்கூறப்பட்டுள்ளது.
பகல் வேளையில் கடுமையான காற்று வீசும் எனவும் படிப்படியாக இரவில் இந்த பலத்த காற்று நிலை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்று கூடாரங்கள் சிறிய குடியிருப்புகள் மற்றும் வெளியரங்க நிகழ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூடாரங்களை சேதப்படுத்தக்கூடியது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழும் எனவும் இதனால் மின்சாரம் தடைபடக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் டொரன்டோ வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.