மடிக்கணினியால் உயிரிழந்த மாணவன்
மடிக்கணினியை மடியில் வைத்து பார்த்து கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு.
சம்பவம்
இச் சிறுவன் மடிக்கணினியை மடியில் வைத்து பார்த்து கொண்டிருந்த போது சார்ஜர் வெடித்து மாணவன் உயிரிழந்துள்ளான்.
குறித்த மாணவனுக்கு 13 வயது என்று தெரிய வந்துள்ளது.
இந்த மாணவன் அம்பலாங்கொட பகுதி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
இம் மாணவன் கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்று தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் பலபிட்டிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அம் மாணவன் படுகாயமடைந்த நிலையில் பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.