சூட்கேஸ்ஸில் மாணவியின் சடலம்
பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத லோலா டேவியட் (Lola Daviet) என்னும் 12 வயதுடைய மாணவி சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் அவர் கொல்லப்படும் முன் வன்புணரப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கைது
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 24 வயது பெண் ஒருவரும் 43 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கொலைக்கான நோக்கம் தெரியவராத நிலையில், கொலை செய்யப்பட்ட லோலாவின் உடலில் 1 மற்றும் 0 ஆகிய எழுத்துக்கள் காணப்படுவதால் அது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவரையும் கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.