மாணவனுக்கு குடிதண்ணீரில் மதுபானத்தை கலந்து கொடுத்த சக மாணவர்கள்! இறுதியில் நேர்ந்த சோகம்
கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் 16 வயது மாணவனுக்கு குடிதண்ணீருடன் மதுபானத்தை கலந்து கொடுத்து விட்டு, ஏனைய மாணவர்களும் பருகியுள்ளனர்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த குறித்த மாணவன் காயங்களுடன் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (03-12-2022) கிளிநொச்சி இடம்பெற்றுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தில் சக மாணவர்கள் புகைப்பழக்கம் போதைப் பழக்கம் உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த மாணவன் கல்வியில் மிகச்சிறந்தவர் என்றும், போதை மற்றும் மதுப் பழக்கம் இல்லாதவர் என்றும் என்றும் கூறப்படுகிறது.
சம்பவ தினத்தன்று தண்ணீருடன் மதுபானத்தை கலந்து மாணவனை குடிக்குமாறு ஏனையோர் திணித்துள்ளனர்.
இதனை அடுத்து துவிச்சக்கர வண்டியில் மாணவன் செல்லும்போது வீதியில் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் பொலிஸார் ஊடாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளது.