உக்ரைனில் குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிடத்தில் புகைப்படம் எடுத்த மாணவ மாணவிகள்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Sundaresan Jun 14, 2022 08:17 AM GMT
Report

உக்ரைனில் குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் நின்று மாணவ மாணவிகள் எடுத்த குழு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

உக்ரைனில் போரால் பொதுமக்கள் பலர் வீடுகளை, உறவினர்களை இழந்து நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மாணவர்களின் கல்வி, வருங்காலம் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் ஒரு குழுவாக நின்று மாணவ மாணவியர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

உக்ரைனில் குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிடத்தில் புகைப்படம் எடுத்த மாணவ மாணவிகள் | Students Photograph A Building Bomb In Ukraine

உக்ரைனில் ஒரு சில மாணவ மாணவியர் குழுவாக சேர்ந்து புகைப்படங்களை எடுத்து கொள்ள விரும்பியுள்ளனர். இதற்காக போரால் உருக்குலைந்து போயுள்ள உக்ரைனில் உள்ள கட்டிடங்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இதுபற்றிய புகைப்படம் ஒன்றை உக்ரைனில் உள்ள ஊழல் ஒழிப்பு மையத்தின் செயல் இயக்குனரான டேரியா காலேனிக்(Daria Colonic) டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு, செர்னிகிவ் பள்ளியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி என்று தலைப்பிட்டு உள்ளார். அதில், 13 மாணவ மாணவியர் இடம் பெற்று உள்ளனர்.

தரை தளத்தில் மாணவிகள் குழு ஒன்று 6 பேராகவும், முதல் தளத்தில் தனித்தனியாக 3 மாணவிகள், 2 மாணவர்கள் எனவும் மற்றும் 2வது தளத்தில் 2 மாணவர்கள் என மொத்தமுள்ள 13 பேரும் இடிந்து, உருக்குலைந்து காணப்படும் கட்டிடங்களுக்கு மத்தியில் புகைப்படத்திற்கு காட்சி கொடுத்துள்ளனர்.

இந்த புகைப்படம் ஸ்டேனிஸ்லாவ் சேனிக் (வயது 25) என்பவரால் எடுக்கப்பட்டு உள்ளது. அவர் கூறும்போது, போரால் ஏற்பட்ட பேரதிர்ச்சி அனுபவத்திற்கு பின்னர், பள்ளியில் படித்த மூத்த 40 மாணவர்களின் முக்கிய நிகழ்வுகளை படம்பிடிக்க தீர்மானித்தேன்.

அதனை நினைவகத்தில் வைத்திருப்பது மிக முக்கியம் என எனக்கு உறுதியாக தெரியும். இப்போதிலிருந்து, 10 முதல் 15 ஆண்டுகளுக்கு பின்பு, அவர்களுக்கு குழந்தைகள் இருக்கும். அவர்களிடம் இந்த புகைப்படங்களை அவர்கள் காட்டுவார்கள் என கூறியுள்ளார்.   

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US