உணவு இடைவேளையை தவிர்க்கும் கனடியர்கள்
கனடாவில் மதிய உணவு இடைவேளை மறைந்து வருவதாக புதிய ஆய்வு மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஃபாக்டர் கனடா வெளியிட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
61% கனடியர்கள் தங்கள் பணிநேர மதிய உணவு இடைவேளையை முற்றிலும் தவிர்க்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
மதிய உணவு எடுப்பவர்களில் 5 பேரில் 2 பேர் தங்கள் மேசையிலேயே உண்பதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணி செய்யும் மேசையிலிருந்து விலகி சிறிது நடந்து, மற்றவர்களை சந்தித்து, தூய காற்றை சுவாசித்து உண்பது,” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“பலர் மதிய உணவை தவிர்த்து, அதிக உற்பத்தித் திறனைப் பெறலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் அது எதிர்மாறாக செயல்பட்டு, நாள் முழுவதும் சோர்வு, கவனம் சிதறல் ஏற்படுகிறது,” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில், மதிய இடைவேளை எடுத்த 38% பேர் தங்களுக்கு மன அழுத்தம் குறைந்ததாகவும், 25% பேர் சக ஊழியர்களுடன் உறவு வலுத்ததாகவும், 24% பேர் பிற்பகல் உற்பத்தி திறன் மேம்பட்டதாகவும் கூறியுள்ளனர்.