ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தாக்குதல்; ஐவர் பலி!

attack people taliban afghan
By Sulokshi Sep 23, 2021 01:04 PM GMT
Sulokshi

Sulokshi

Report

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் காபூல் நகரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலீபான்களை இலக்காக கொண்டு அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலியாகி உள்ளதுடன் 21 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூவர் பொதுமக்கள் என்றும், மற்றவர்கள் தலீபான் எனவும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கனில் தலீபான்கள் ஆட்சிபெனினும் பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பு இதுவாகும். இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரில் கடந்த ஞாயிற்று கிழமை மாலை தலீபான்கள் சென்ற வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஒரு குழந்தை கொல்லப்பட்டதுடன் தலீபான் உறுப்பினர் உள்பட 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

பொதுமக்களின் வாழ்வு மற்றும் சொத்துகளுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என தலீபான்கள் உறுதி அளித்திருந்த சூழலில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்து உள்ளன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜலாலாபாத் நகரில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக உளவு துறை இயக்குனரகம் தெரிவித்தது.

அத்துடன் உளவு துறை அதிகாரிகள் இலக்காக வைக்கப்படுகின்றனர் என அந்த துறை தலைவர் பஷீர் கூறியுள்ளார். அந்நாட்டின் ஜலாலாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 4 குண்டுவெடிப்பில் , 2 பேர் கொல்லப்பட்டு உள்ளதுடன் 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதேவேளை ஆப்கானின் முன்னாள் அரசின் எல்லை படையின் தளம் அருகே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியதில், 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். எனினும், இந்த தாக்குதல்களுக்கான நோக்கம் எதுவும் அறியப்படவில்லை.

இதில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் என மாகாண தகவல் மற்றும் கலாசார துறை தலைமை தெரிவித்து உள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US