விண்வெளியில் திரும்பிய வீரர்களுக்கு இப்படியொரு பாதிப்பா!

United States of America NASA
By Sundaresan Jul 08, 2022 10:09 AM GMT
Report

விண்வெளி சென்று திரும்பிய வீரர்களின் எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களின் உடலானது பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. அதே சமயம் மனிதர்கள் பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்குச் சென்று திரும்பும் அளவிற்கு விஞ்ஞானத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் விண்வெளி பயணம் மேற்கொள்பவர்கள் அதற்கேற்றவாறு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மனித வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1961 ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் யூரி கேகரின்(Yuri Gagarin) விண்வெளிக்குச் சென்றார்.

விண்வெளியில் திரும்பிய வீரர்களுக்கு இப்படியொரு பாதிப்பா! | Such An Impact On The Soldiers Who Returned Space

அதனைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்(Neil Armstrong), நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் பிறகு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் மாதக்கணக்காக தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பல நாட்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இருந்துவிட்டு அவர்கள் பூமிக்கு மீண்டும் திரும்பும் போது, அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள், எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனடா நாட்டைச் சேர்ந்த கல்கேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய 17 விண்வெளி வீரர்களிடம்(14 ஆண்கள், 3 பெண்கள்) இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் சராசரியாக 4 முதல் 7 மாதங்கள் வரை விண்வெளியில் இருந்துள்ளனர். பூமிக்கு திரும்பிய பிறகு சுமார் ஒரு வருடத்திற்கு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

விண்வெளியில் திரும்பிய வீரர்களுக்கு இப்படியொரு பாதிப்பா! | Such An Impact On The Soldiers Who Returned Space

இந்த ஆய்வின் போது விண்வெளி சென்று திரும்பிய வீரர்களின் கால்களில் உள்ள 'டிபியா' என்ற எலும்பில் 2.1% அளவிற்கு தேய்மானம் ஏற்பட்டுள்ளதாகவும், எலும்புகளின் உறுதித்தன்மை 1.3% அளவு குறைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இருப்பினும் ஒரு வருடத்தில் 8 விண்வெளி வீரர்களின் எலும்புகள் பழைய நிலைக்கு திரும்பியதாகவும், 9 பேரின் எலும்புகள் நிரந்தர பாதிப்பை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் சராசரியாக 20 வருடங்களில் ஏற்படும் எலும்பு பாதிப்பு, விண்வெளியில் 6 மாதங்களில் ஏற்படுவதாக ஆய்வாளர் லேய்க் கேபல் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதில் பாதி பேருக்கு அந்த பாதிப்பு குணமடைந்து விடுகிறது என்றும், மற்றவர்களின் எலும்புகளில் அது நிரந்தர பாதிப்பாக மாறி விடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சாதாரணமாக பூமியில் நமது எடையை தாங்கி நிற்கும் கால் எலும்புகள், விண்வெளியில் எடை அற்ற சூழலில் இருக்கும் போது இத்தகைய பாதிப்புகளை அடைகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இதனை சரிசெய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். நாசா, இஸ்ரோ உள்ளிட்ட பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது குறித்த திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இத்தகையை சூழலில் இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US