கனடாவில் சிரேஸ்ட பிரஜைக்கு கிடைத்த இரட்டை அதிர்ஸ்டம்
கனடாவில் சிரேஸ்ட பிரஜை ஓருவருக்கு இரட்டை அதிர்ஸ்டம் கிட்டியுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், சட்பெரி (Sudbury) நகரத்தைச் சேர்ந்த மார்சல் லெக்லெயர் (Marcel Leclaire) என்பவர் லொத்தர் சீட்டிலுப்பில் 3 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார்.
லெக்லயர் இரண்டாவது தடவையாக இவ்வாறு பெருந்தொகை பணப் பரிசினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டு அவர் என்கோர் லொத்தர் சீட்டிலுப்பில் 1 மில்லியன் டொலர் வென்றிருந்தார்.
தற்போது 72 வயதான ஓய்வுபெற்ற லெக்லெயர், டொராண்டோவில் உள்ள லொத்தர் சீட்டு நிறுவனத்திற்கு சென்று தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.
தாம் தொடர்ந்தும் வாரம் தோறும் லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வெற்றிச் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்தபோது அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும், பெற்ற பரிசுத் தொகையை குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளவும் புதிய வீடு வாங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இது அற்புதமான உணர்வு. சொல்ல முடியாத மகிழ்ச்சி,” என லெக்லெயர் மேலும் தெரிவித்தார். இந்த வெற்றி சீட்டு சட்பெரி நகரின் லசல் புல்வெளியில் உள்ள சேர்கில் என்ற கடையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.