தரையிறங்கும்போது திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்!
அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது திடீரென டயர் வெடித்து தீப்பிடித்ததில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று , வர்ஜினியாவிலிருந்து 190 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 757 விமானம், கடந்த புதன்கிழமை மாலையில் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது திடீரென டயர் வெடித்து அதிலிருந்து நெருப்பும் புகையும் வெளிப்பட்டது.
Passengers were forced to evacuate a #Delta Boeing 757 (N767DL) after it landed at #Atlanta today at 5:37 p.m. Flight #DL1437 took off from #Richmond. The left main gear tire blew during landing, which sparked a fire.
— FlightMode (@FlightModeblog) August 3, 2023
? ©Mike Russell | ? ©Bruce Campbell | ©Jean Druckenmiller pic.twitter.com/5libGzQtT7
இதையடுத்து டாக்ஸி வே பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியே அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில் இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.