உல்லாச கப்பலில் திடீர் தீ விபத்து; 288 பேரின் நிலை என்ன?
கிரீஸிலிருந்து 288 பேருடன் சென்ற யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரீஸிலிருந்து மத்தியதரைக் கடலின் அயோனியன் கடல் வழியாக யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பல் இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 237 பயணிகள் மற்றும் 51 பயணிகள் என மொத்தம் 288 பேர் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கிரீஸூக்கும் அல்பேனியாவுக்கும் இடையே உள்ள கோர்பு தீவுக்கு அருகில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற சென்ற மீட்பு படையினர் கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு அருகில் இருந்த கோர்பு தீவில் கொண்டு சேர்த்தனர்.
மேலும் இந்த திடீர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.