பள்ளத்தில் சரிந்த வாகனத்தில் சிக்கி இரவு முழுவதும் உயிருக்கு போராடிய நபர்
நோவா ஸ்கோடியாவில் பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளான வாகனத்தின் அடியில் சிக்கி 65 வயதான நபர் இரவு முழுவதும் உயிருக்கு போராடியுள்ளார்.
நியூ மினாஸிலிருந்து தெற்கே 15 கிலோமீர்றர் தொலைவில் உள்ள சுங்கன் ஏரியில் உள்ள ஸ்டிர்லிங் சாலையில் ATV ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இச்சம்பவத்தில், அதன் சாரதி 65 வயதான நபர், அந்த வாகனத்தின் அடியில் சிக்கியுள்ளார்.
உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் இரவு முழுவதும் அந்த வாகனத்தின் அடியில், உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார்.
இந்த நிலையில் கிங்ஸ் மாவட்ட பொலிசாருக்கு விபத்து தொடர்பில் தகவல் கிடைக்க, சனிக்கிழமை பகல் சுமார் 7.05 மணிக்கு சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
அந்த நபர் எவ்வாறு காவல்துறையை தொடர்பு கொண்டார் என்பது தங்களுக்கு தெரியவில்லை என கூறிய பொலிசார், அந்த நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் அந்த நபர் மீடக்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், விபத்து குறித்து விசாரிக்கப்படும் என்றனர்.