டிரம்பிற்கு சுந்தர் பிச்சை வாழ்த்து; இடையில் நுழைந்த எலான் மஸ்க்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இற்கு கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போன் காலில் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த போது, அந்த போன் காலில் எலான் மஸ்க் இணைந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்காக எலான் மஸ்க் கடுமையான பணியாற்றினார். இதனால் தன்னுடைய முதல் தோழன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க்கிற்று டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார். அதேவேளை தேர்தலின்போது கமலா ஹாரிஸ் என கூகுளில் தேடினாலும் கமலா ஹாரிஸ் செய்திகள் வருகிறது.
டொனால்டு டிரம்ப் என தேடினாலும் கமலா ஹாரிஸ் செய்திதான் வருகிறது என எலான் மஸ்க் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.