பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! இறுதி நிமிடம் வரை பதற வைத்த விண்கலத்தின் காட்சிகள்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒன்பது மாதங்களாக ஆய்வு மேற்கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில் மோர் உள்ளிட்ட நால்வர் பயணித்த விண்கலம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.27 மணிக்கு குறித்த விண்வெளி வீரர்கள் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்ததுள்ளது.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்துள்ளார்.
PROMISE MADE, PROMISE KEPT: President Trump pledged to rescue the astronauts stranded in space for nine months.
— The White House (@WhiteHouse) March 18, 2025
Today, they safely splashed down in the Gulf of America, thanks to @ElonMusk, @SpaceX, and @NASA! pic.twitter.com/r01hVWAC8S
தொழில்நுட்ப கோளாறு
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்துள்ளது.
பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்ததுள்ளது.
8 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் பேரி வில்மோர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
WELCOME HOME to Retired Navy Captains Suni Williams and Butch Wilmore!!
— DOD Rapid Response (@DODResponse) March 18, 2025
🇺🇸🇺🇸🇺🇸 pic.twitter.com/Ka5usYBDPM