விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்... மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ வைரல்!
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார்.
விண்வெளி மையத்திற்கு சென்ற அவர் அங்கு மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார்லைனர்' விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த நிலையில், 25 மணித்தியால பயணத்திற்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக 3-வது முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார்.
Hugs all around! The Expedition 71 crew greets Butch Wilmore and @Astro_Suni aboard @Space_Station after #Starliner docked at 1:34 p.m. ET on June 6. pic.twitter.com/wQZAYy2LGH
— Boeing Space (@BoeingSpace) June 6, 2024
இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணி அளவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் சென்றனர்.
சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூன் 14-ம் திகதி பூமிக்கு மீண்டும் திரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.