சுனிதா வில்லியம்ஸ்க்கு முதல்கட்ட மருத்துவ பரிசோதனை
பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் இற்கு முதல் கட்ட மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் ஆகிய இருவரையும் அழைத்து வர, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சென்றது.
அதன் மூலம் 17 மணி நேர பயணத்திற்கு பின்னர், சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பி உள்ளனர்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா கடற்பகுதியில் இறங்கிய விண்கலத்திலிருந்து, சுனிதா, அலெக்சாண்டர், புட்ச், நிக் ஹேக், ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டு அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.