பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு பகுதியில் அவசரகாலநிலை
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு பகுதியில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஷன்சயின் கரையோர பிராந்தியத்தில் இவ்வாறு அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக Sechelt and the shíshálh Nation ஆகிய மாவட்டங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வறட்சி நிலைமை காரணமாக இவ்வாறு அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தி, நீர் போத்தலில் அடைக்கும் உற்பத்தி, மருத்துவ தேவையற்றி கஞ்சா செய்கை உள்ளிட்டன உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.
துரதிஸ்டவசமாக நீர் பயன்பாட்டை வரையறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 100 நாட்களுக்கு மேல் குறித்த பகுதியில் மழை பெய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான வறட்சி நிலையினால் அந்தப் பகுதியின் நீர்நிலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.