வானில் பிரம்மாண்டமாக தோன்றிய ”சூப்பர் மூன்” - வியக்க வைக்கும் புகைப்படங்கள்
வானில் அதிசய நிலவான சூப்பர் மூனை மக்கள் கண்டு ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பூமியை நிலவானது நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நீண்ட தொலைவுக்கு செல்லும் பாதை அபிஜீ என்றும், குறைந்த தொலைவில் வரும்போது பெரிஜீ என்றும் அதன் தொலைவானது அழைக்கப்படுகிறது.
பூமியில் இருந்து குறைந்த பட்சமாக பெரிஜீ சுற்றுப்பாதையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக அபிஜீ பாதையில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலவானது சுற்றிக் கொண்டுள்ளது.
இன்று இந்த நீள்வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நிலவானது வரும் போது வழக்கமாக நாம் பார்க்கும் நிலவைவிட 7 சதவீதம் பெரியதாகவும், 14 சதவீதம் அதிக ஒளியுடனும், பிரகாசமாகவும், தெளிவாகவும் காணப்படும்.
பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வ காட்சியை சூப்பர் மூன் அதாவது ‘‘சூப்பர் நிலவு’’ என்று அழைக்கிறோம்.
நேற்று EST நேரப்படி 11.33PM க்கு தோன்று சூப்பர் மூனை மக்கள் கண்டு ரசித்துள்ளார்கள், இதன் வியக்க வைக்கும் புகைப்படங்கள் இதோ,




