அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே ஆதரவு ; புடின் தெரிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே (Kamala Harris) தமது ஆதரவு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நடைபெற்ற பொருளியல் மாநாட்டின்போது அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) அதனைத் தெரிவித்தார்.

டிரம்ப் போல் கமலாஹாரிஸ் செயல்படமாட்டார்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்கும்படி தமது ஆதரவாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
அதனால் நாங்களும் அதையே செய்யப்போகிறோம். அவருக்கே அதரவு அளிக்கப்போகிறோம் என புட்டின் கூறினார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தல் வேட்பாளருமான டிரம்ப் (Donald Trump) ரஷ்யாவுக்கு எதிராகப் பல தடைகளை விதித்ததாக அவர் சொன்னார்.

எனினும் ஹாரிஸ் அத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டார் என்று நம்புவதாகத் புட்டின் குறிப்பிட்டார்.
அதேவேளை அமெரிக்கா RT என்கிற ரஷ்யாவின் அரசாங்க செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் மீது தடைகளை விதித்தது.
அவர்கள் இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        