ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
ஸ்கார்பரோவில் அமைந்துள்ள கடைத்தொகுதியயொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை, போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
சவுத் சீடர்பிரே பகுதியில், பெல்லமி ரோடு மற்றும் நேல்சன் தெரு அருகே, எக்லிங்டன் அவென்யூ ஈஸ்ட் வடக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை மாலை 5 மணியளவில் குறித்த இடத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த அழைப்பின்அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவரை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் படுகாயங்களுடன் இருந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.. சம்பவத்திற்குப் பிறகு, சந்தேக நபர் அந்த இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார்.
சந்தேக நபர் சுமார் 20 வயதிற்கு உட்பட்டவர் எனவும், கருப்பு இனத்தவராகவும், சுமார் ஆறு அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் விபரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.