டொரண்டோவில் வாகனத்தை மோதச் செய்து 4 பேரை காயப்படுத்திய நபர் தப்பியோட்டம்
டொரண்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் மைய வளாகத்தில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இது குறி வைத்து திட்டமிட்ட தாக்குதலாக இருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாதசாரி நடைபாதையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரில் வந்த ஒருவர், நால்வரை மோதிய பின்பு, சம்பவ இடத்திலிருந்து காரை ஓட்டி தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நால்வரில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கினற்னர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே இது யாரையோ குறிவைத்து திட்டமிட்டு நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என தென்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒரு கருப்பு பச்சை நிற சிடான் கார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வாகனத்தின் பதிவு எண் DEDZ-565 என போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், வாகனம் செலுத்தியவர் பற்றிய விவரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.