டொரோண்டோ பஸ்சில் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபரைத் தேடும் பொலிஸார்
ரீ.ரீ.சீ TTC பஸ் வண்டியில் ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் ஒரு நபரை டொரோண்டோ பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் யூனியன் பஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
மாலை 9 மணி அளவில் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து ஒரு அழைப்பு கிடைத்ததாகவும், வண்டி எண் 4432-ல் பயணம் செய்த பெண்ணிடம், ஒரு நபர் பாலியல் தாக்குதலும் தொந்தரவும் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருக்கு வயது: 35 முதல் 45 வரை இருக்கும் எனவும், உயரம்: 5 அடி 6 அங்குலம் எனவும், தலைமுடி: கறுப்பு, குறுகியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த தகவல்கள் உள்ளவர்கள் 416-808-5200 என்ற எண்ணில் டொரோண்டோ பொலிஸாரைத் தொடர்புகொள்வதோ அல்லது அனாமதேயமாக 416-222-TIPS (8477) என்ற எண்ணில் தகவல் வழங்கலாம் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.