கனடாவில் பல வாகனங்களை சேதப்படுத்திய 3 பேர் கைது
கனடாவின் வின்ட்சர் நகரில் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் மூன்று இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான வாகன சேதப்படுத்தல் மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 1 வரை நான்கு வெவ்வேறு திகதிகளில், நகரம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நிறுத்தப்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல வாகனங்களில் இருந்த பொருட்களும் திருடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.
ஒரு சம்பவத்தில் திருடப்பட்ட கடன் அட்டையைப் பயன்படுத்தி பல முறை கொள்முதல்கள் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 19 வயதுடைய இரு இளைஞர்கள் வின்ட்சர் பொலிஸாரிடம் தாங்களாகவே சரணடைந்தனர்.
மறுநாள் 18 வயதுடைய மற்றுமொரு இளைஞர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
போலீசார் கூறியதாவது, குற்றச்சாட்டாளர்கள்மீது மொத்தம் 126 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வின்ட்சர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.