கனடாவில் வீடு உடைப்பு சம்பவங்கள் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யோர்க் பிராந்திய போலீசார் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
அண்மையில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் குடியிருப்புகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையர்கள் பசை போன்ற ஒரு பதார்த்தத்தை பயன்படுத்தி கதவுகளை உடைத்து உள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
யோர்க் பிராந்தியத்தில் இவ்வாறான இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரண்டு சம்பவங்களின் போதும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை வேளையில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளை சம்பவங்களின் போது ஏற்பட்ட இழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.