கனடாவில் பொலிஸ் போன்று தோன்றி பணம் திருடிய நபர்கள்
கனடாவில் பொலிஸ் உத்தியோக்ததர்கள் போன்று நடித்து ஒருவரிடமிருந்து பணம் திருடியுள்ளனர்.
நபர் ஒருவரிடமிருந்து குறித்த சந்தேக நபர்கள் 15000 டொலர்களை திருடியுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர்களை கைது செய்யும் முனைப்புக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் கணக்கில் மோசடிகள் இடம்பெறுவதாக மிரட்டி இந்தப் பணம் களவாடப்பட்டுள்ளது.
தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்திய நபர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டைகளை எடுத்துச் சென்று பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.