கனடாவில் நூதன முறையில் மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்கள்
டொராண்டோவில், சில்லறை வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, 'ஸ்மார்ட் கிளாஸ்' (smart glasses) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர்களின் லாகின் விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடி, பல லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை டொராண்டோ போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் அளித்த தகவலின்படி, இந்த மோசடிகள் செப்டம்பர் 2025 மற்றும் பெப்ரவரி 2026-க்கு இடையில், டொராண்டோ பெரும்பாக பகுதி முழுவதிலும் உள்ள பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களில் நடந்துள்ளன.
மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட AI தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தியும், ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பியும், அவர்களின் லாகின் விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடியுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

"திருடப்பட்ட இந்த விவரங்களைப் பயன்படுத்தி, அவர்கள் கடையின் கணினி அமைப்புகளை அணுகி, சுய-சேவை கவுண்ட்டர்கள் (self-checkout terminals) வழியாக கிஃப்ட் கார்டுகளில் போலியாகப் பணத்தை ஏற்றி மோசடி செய்துள்ளனர்" என்று போலீசார் மேலும் விளக்கினர்.
இந்த மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு, இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய 112 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்த மோசடியால் பல சில்லறை விற்பனை நிலையங்கள் "கணிசமான நிதி இழப்பை" சந்தித்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.