டொலர் நெருக்கடியின் எதிரொலி: சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகம் இடை நிறுத்தம்
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான உரிய பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 300,000 பேருக்கு இதுவரை சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படவில்லை என அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் அலுவலகம் மாதத்திற்கு சுமார் 60,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதாகவும், டிசம்பர் 2021 முதல் புதிய சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிட்டு வழங்க முடியவில்லை என்றும் கூறினார்.
இதேவேளை, ஒரு மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்களை கொள்வனவு செய்வதற்கான கடனுதவி கடிதங்களை வழங்குவதற்கு தேவையான டொலர்கள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.