துருக்கியில் விமானசேவைகள் இடைநிறுத்தம்!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
இதன்படி தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹடாய் விமான நிலையத்தின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோல் தெற்கில் உள்ள காசியான்டெப் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து வரும் சிவிலியன் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை செயன் துறைமுகத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டிரிபெகா ஷிப்பிங் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணாமாக இதுவரை 1300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.