ஒன்ராறியோவில் இடம்பெற்ற விபத்தில் ஓருவர் பலி
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள 'டில்டன் லேக்' பகுதியில் நெடுஞ்சாலை 11-இல் வைட் பைன் வீதிக்கு அருகே அக்டோபர் 24-ஆம் திகதி சரக்கு லாரியும் எஸ்டபிள்யூவி காரும் மோதி கொடூர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஒன்ராறியோ மாகாணக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அன்று பிற்பகல் சுமார் 2:00 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், நார்த் பே காவல்துறையினர், நிபிசிங் முதலுதவிப் படையினர் மற்றும் மார்ட்டின் ரிவர் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

எனினும், காரின் ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டதால், நெடுஞ்சாலை 11-இல் நெடுஞ்சாலை 64 முதல் காலின்ஸ் டிரைவ் வரையிலான இருவழிப் போக்குவரத்தும் இரவு 9:30 மணி வரை முழுமையாக மூடப்பட்டிருந்தது.
உயிரிழந்தவரின் பெயர் விபரங்களையோ அல்லது விபத்துக்கான சரியான காரணத்தையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.