ஸ்வீடனின் செயலால் ஆத்திரமடைந்த ரஷ்யா: விடுத்த பகீரங்க எச்சரிக்கை
ஸ்வீடன் அரசாங்கம் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) முன்னதாக அறிவித்திருந்தார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 2 வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறிய நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்வீடன் அரசாங்கம் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாக செலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டினுக்கு (Vladimir Putin) எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடனின் செயலால் ஆத்திரமடைந்த ரஷ்யா, ஸ்வீடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடன் பின்விளைவுகளை சந்திக்கும்.
மேலும், நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.