ஸ்வீடன் மன்னர் கனடாவிற்கு விஜயம்
ஸ்வீடன் அரச குடும்பத்தினர் கனடாவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.
ஸ்வீடன் அரச குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு கனடாவில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தில் முக்கிய அரச மந்திரிகள் மற்றும் பல ஸ்வீடன் நிறுவனங்களின் உயர்நிலை பிரதிநிதிகளும் இணைந்துள்ளனர்.

ஸ்வீடனின் நீண்ட காலம் ஆட்சியில் உள்ள மன்னர் கார்ல் XVI குஸ்டாப் மற்றும் மகாராணி சில்வியா, 2006க்குப் பிறகு முதன்முறையாக கனடாவுக்கு விஜயம் செய்கின்றனர்.
கனடாவின் பிரதம நீதியரசர் ரிச்சர்ட் வாங்னர் உட்பட பிரதிநிதிகள் இன்று காலை ரிடோ ஹாலில் மன்னர், மகாராணியை அதிகாரப்பூர்வமாக வரவேற்கின்றனர்.
ஸ்வீடன் அரச குடும்பத்தினர் பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிற கனடிய அதிகாரிகளையும் சந்திக்க உள்ளனர்.
உக்ரைனுக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இன்று பிற்பகல் நடைபெறும் நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், ஸ்வீடன் துணைப் பிரதமர் எப்பா புஷ் மற்றும் உக்ரைனிய-கனடிய சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுனர் நாயகத்தின் இல்லத்தில் இன்றிரவு மன்னர், மகாராணிக்கு மரியாதையாக அரசு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.