இலங்கையில் பிறந்த பிரிட்டிஷ் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் டேவிட் விரர் காலமானார்
பிரிட்டிஷ் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் டேவிட் வில்கி தனது 70வது வயதில் காலமானார். அவரது மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்,
“டேவிட் வில்கி புற்றுநோயுடன் அவரது துணிச்சலான போரைத் தொடர்ந்து, இன்று காலை அவரது குடும்பத்தினரால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக இறந்துவிட்டார்”
ஸ்காட்டிஷ் பெற்றோருக்கு இலங்கையில் பிறந்த வில்கி
ஸ்காட்டிஷ் பெற்றோருக்கு இலங்கையில் பிறந்த வில்கி, 1970 ஆம் ஆண்டு எடின்பரோவில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலத்துடன் தனது முதல் பதக்கத்தை வென்றார்.
அவர் 1972 இல் முனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றும் அடுத்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்றார். வில்கி 1974 இல் இரண்டு தங்கங்கள் உட்பட ஸ்கொட்லாந்திற்கு மேலும் மூன்று கொமன்வெல்த் பதக்கங்களை வென்றார்.
1975 ஆம் ஆண்டில், அவர் உலக அளவில் 100 மீ மற்றும் 200 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் இரட்டையர்களை முடித்தார். மற்றும் ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் விளையாட்டு ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாது கனடாவில் நடந்த 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ர அவர்,
நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் பிரிட்டிஷ் வீரர் ஆவார் . இந்நிலையில் டேவிட் வில்கி அரது ரசிகர்களுக்கு கவக்லையை ஏற்படுத்தியுள்ளது.