பங்களாதேஷிற்கு வழங்கி வந்த நிதியுதவி திட்டத்தை நிறுத்திய சுவிட்லாந்து
பங்களாதேஷிற்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்துவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் பங்களாதேஷிற்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்துவதற்கான முக்கிய காரணம் நிதிப் பற்றாக்குறையாகும்.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு உதவும் வகையில் பாராளுமன்ற ஒப்புதலுடன் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்.
இந்த நிதியை வைத்து வெளிநாடுகளுக்கு சுவிஸ் அரசு உதவி செய்யும். கடந்த டிசம்பர் மாதம் கேட்கப்பட்ட நிதியைவிடக் குறைந்த அளவில் மட்டுமே சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனால் பங்களாதேஷிற்கு சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தினால் நிதியுதவி வழங்கமுடியாமலுள்ளது.
சுவிட்சர்லாந்து தற்போது பங்களாதேஷிற்கு மட்டுமின்றி அல்பேனியா, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியையும் நிறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.