சுவிஸ் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி!
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இக்னாசியோ காசிஸுக்கு (Ignazio Cassis) கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இக்னேசியோ கேஸ்சிஸ், இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெற உள்ள முனீச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வது என திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும், பரிசோதனை முடிவு தெரிந்ததும் ஜனாதிபதி தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருந்தபடியே பணிகளை அவர் தொடர்வார் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று முனீச் பாதுகாப்பு மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.