சிட்னி போண்டி கடற்கரை தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சந்தேக நபர்
அஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தபோது தாக்குதல் நடத்தியவர் கோமாவில் இருந்து மீண்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஹனுக்கா பண்டிகையை கொண்டாட கூடியிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 16 பேர் பலியானார்கள்.

முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியாவை சேர்ந்த தந்தை, மகன் என்பதும், அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் உறுதியானது.
சம்பவம் இடம்பெற்றபோது பொலிஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் தந்தை சாஜித் அக்ரம் உயிரிழந்தார். கோமா நிலைக்கு சென்ற மகன் நவீத் அக்ரமுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கோமாவில் இருந்து மீண்ட நிலையில் நவீத் அக்ரம் மீது கொலை, பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட 59 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அவரை காணொலிக்காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.